புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கைதிகள் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் அல்ல, சட்டத்தை அனைவருக்கும் ஒரே விதமாக அமுல்படுத்தும் நோக்கில் இவ்வாறு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 12000 முறைப்பாடுகள் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளுக்கு அமைய முறைப்பாடுகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணை அதிகாரிகளுக்கு போதியளவு கட்டிட வசதிகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மிகப் பெரிய லஞ்ச ஊழல் மோசடியான சுங்கத் திணைக்கள 125 மில்லியன் மோசடி தொடர்பில் இரண்டு சுங்க அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதிமன்றிற்கு சென்றிருந்த தில்ருக்ஸி இந்த தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்