புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது !

 

புதிய தொழில்நுட்பங்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம் தற்போது உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். 

maithiri

தனது ஜேர்மனிய மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கான விஜயத்தின் போது அந்த நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அந்த நாடுகளுடன் கல்விப் பரிமாற்று திட்டங்களை செயற்படுத்துவதற்கும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். 

மாலபே தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். 

நாட்டின் பிள்ளைகள் நவீன தொழில்நுட்ப அறிவு மற்றும் கல்வியின் மூலம் போராடி அவர்களுக்கு நாளைய உலகை வெற்றி கொள்வதற்காக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.