தமது குடும்பம் 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை சேர்த்துள்ளது என்பதை நிரூபித்தால் தான் அரசியலிலிருந்து விலகுவேன் என நாமல் ராஜபக்ஷ எம்.பி., வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சவால் விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் அது தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடந்த வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்பதற்கு நான்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.