சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் !

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாகவே அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல்போனது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாக நியமிப்பதற்குரிய தீர்மானம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

rauff hakeem

 

புதிய அரசமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் மக்களிடம் கருத்தறியும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்தப் பணிகளை சிவில் சமூகத்தினர், நிபுணர்கள் முன்னெடுப்பது வரவேற்கத்தக்கது.தேர்தல் முறைமை மாற்றம் பற்றியும் புதிய அரசமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்போது கலப்பு முறையொன்றை நாம் முன்னிலைப்படுத்துகின்றோம். 

 

இவ்வாறானதொரு திட்டத்தை கடந்தமுறையும் நாம் முன்வைத்தோம். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவேதான் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல்போனது.

 

எனவே, தேர்தல் மறுசீரமைப்பு இடம்பெறும்போது, சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும். கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.