அவ்வாறு செய்வதன்மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாகாக நியமிப்பதற்குரிய தீர்மானம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பல ஜனாதிபதிகளுக்கு முடியாமல்போனதை மஹிந்த ராஜபக்ஷ செய்தார். 30 வருடகால போருக்கு அவர் முடிவு கட்டினார்.
அவர் இதை செய்திருக்காவிட்டால் நாட்டின் இன்னும் போர் தொடர்ந்திருக்கும். உயிரிழப்புகள் தொடர்ந்திருக்கும். எனவே, மஹிந்த முக்கிய நபராவார் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
திருடன், மோசடிக்காரன் எனக்கூறுபவர்கள் இந்த உண்மையையும் ஏற்கத்தான் வேண்டும்.
பெருந்தெருக்கள், துறைமுகம், விமானநிலையம் எனப் பாரிய அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்தார். காங்கேசன்துறைவரை புகையிரத பாதை அமைத்தார்.
நாட்டிலுள்ள அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.
எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தூக்கில் போட வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்படுவது தவறாகும்.
இதேவேளை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பெரும்பான்மை மக்களின் ஆசீர்வாதம் அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.