சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதாயின் பொதுச் செயலாளர் பதவியைத் தாருங்கள் !

maithri dissanayake
சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதாயின் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, 

கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதாயின் சுதந்திரக்கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளில் இரண்டில் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை இதற்காக தெரிவு செய்து இரண்டொரு தினங்களில் ஜனாதிபதியிடம் சிபாரிசு செய்யவுள்ளோம். 

சுதந்திரக் கட்சி பிளவுபட்டால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது அது கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும். அதனைத் தடுக்கும் வகையில் கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை கூட்டு எதிர்க்கட்சியினரால் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக கட்சியின் பொதுச் செயலாளர் பதவியைப் பெற்று இணைந்து செயற்பட கூட்டு எதிர்க்கட்சியினர் தயாராக இருப்பதாவும் குறித்த முக்கியஸ்தர் மேலும் தெரிவித்துள்ளார்.