நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, கூட்டு எதிர்க்கட்சியினர் சுயாதீனமாக இயங்க முடியுமா என்பது பற்றி இன்றைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான சுயாதீன தரப்பாக அங்கீகரிப்பது குறித்த பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் பேசி தீர்வு காணப்படும்.
இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த எனக்கு கடந்த நாட்களில் நேரமிருந்த போதிலும், ஜனாதிபதி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டிருந்தார். இதனால் இன்று (23ம் திகதி) மாலை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இன்று இந்தப் பிரச்சினைக்கு தீர்வு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தினேஸ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.