மகிந்தவுக்கு தேவையென்றால் புதிய முச்சக்கர வண்டி கட்சியொன்றை உருவாக்க முடியும் : துமிந்த !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் புதிய கட்சி அமைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு முடியாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… 

 

dumintha thumintha

மேலுமொரு முச்சக்கர வண்டி கட்சியொன்றைத் தவிர, சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்கும் புதிய கட்சியொன்றை குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கிட முடியாது. 

கட்சியின் மொத்த உறுப்பினர்களை முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச்செல்லக் கூடிய வகையிலான அரசியல் கட்சிகள் டசன் கணக்கில் நாட்டில் காணப்படுகின்றன. 

எனினும் இவ்வாறான கட்சிகளினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சவால் ஏற்படுத்த முடியாது. 

மஹிந்த ராஜபக்சவிற்கு தேவையென்றால் தங்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு புதிய முச்சக்கர வண்டி கட்சியொன்றை உருவாக்க முடியும். 

ராஜபக்ச குடும்பத்துடன் தொடர்புடையவர்கள் இந்தக் கட்சியில் இணைந்து கொண்டாலும், சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய எவரும் இணைந்து கொள்ளப் போவதில்லை. 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற காரணத்தினால் மஹிந்தவினால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை வகிக்க முடிந்தது. 

எனினும், மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார். இன்று அவரே எமது தலைவர் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.