பி.எம்.எம்.ஏ.காதர்
எமது பிரதேச எல்லைக்குள் எங்களை நாங்களே ஆட்சி செய்யக்கூடிய அதிகாரங்களைக் கொண்டதுதான் உள்ளுராட்சி சபையாகும் இந்தச் சபையின் மூலம் எங்களது தேவைகளை நாங்களே நாங்களே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவு உத்தியோகத்தர்களுக்கான நிதி முகாமைத்துவப் பயிற்சிப் பட்டறை இன்று செவ்வாய்க்;கிழமை(23-02-2016)மருதமுனை பொது நூலக மேல் மாடியில் இயங்கிவரும் சமூக வள நிலையத்தில் இடம் பெற்றது இதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :-எமது பிரதேசத்திலே வாழ்கின்ற மக்களின் உரிமைகளை சரியாக நிறைவேற்றுவதற்கான அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு இருக்கின்றது அதன் அடிப்படையில்தான் சில விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையில் மத்திய அரசு,மாகாண அரசு,அதற்கு அடுத்ததுதான உள்ளுராட்சி அரசாகும் இந்த அரசின் மூலம் எங்களது அடிப்படைத் தேவைகளை நாங்களே நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த உள்ளுராட்சி சபையாகும் இந்தச்சபை எமது உரிமையோடு சம்பந்தப்பட்ட சபையாகும் என்றார்.
ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில்,கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்.எம்.எம்.ரசீட்,பொறியிலாளர்பி.சர்வானந்தா, கணக்காய்வுப் பிரிவின்; பொறுப்பாளர் எம்.எஸ்.விஸ்றுல் வஜிதா ஆகியோருடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்தப் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டனர்.
இங்கு ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்,கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியிடம் கணணித் தொகுதியையும் கையளித்தார்.