அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையினை தரம் உயர்த்தவும் அபிவிருத்தி செய்யவும் கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களோடு கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதல் அமைச்சர் காரியாலயத்தில் 23.02.2016 ம் திகதி பி.ப.01.00 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கௌரவ அமைச்சரிடம் அபிவிருத்தி குழுவினர் தமது வைத்தியசாலை தரமுயர்த்தல் மற்றும் அபிவிருத்தி செய்யபடவேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்றுகொண்டதோடு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெற ஆவணங்களை சமர்ப்பித்து தருவதாகவும் அதனூடாக அபிவிருத்தி செய்வதாகவும் வாக்குறுதி அளித்ததுடன் எதிவரும் மார்ச் மாதம் மேலதிகமாக ஒரு வைத்தியரையும் இருதாதியர்களையும் நியமித்து தருவதாக வாக்குறுதி அளித்தார் குறித்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் லாஹிரும் கலந்துகொண்டார்.
ஊடகப்பிரிவு