அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஜேர்மன் அரசாங்கத்திடம் ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இடைநிறுத்தப்பட்ட மீன் ஏற்றுமதியை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜேர்மன் அரசியல் குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
ஒஸ்ரியாவிற்கு மேற்கொண்ட விஜயமும் இதன்போது வெற்றியளித்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒஸ்ரியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது.
அத்துடன் அங்கிருந்தும் கடனுதவி மற்றும் முதலீடுகளை பெறுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர்கள் இதன்போது, தெரிவித்துள்ளனர்.