நாட்டுக்கு வருகை தந்திருக்கும் ஆசிய அபிருத்தி வங்கியின் தலைவர் Takehiko Nakao இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் இலங்கைக்கு வழங்கப்படக் கூடியதான நிதியுதவிகள் மற்றும் அந்த உதவிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆகியோருக்கிடையில் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டது.