இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்த விடயத்தை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்த இந்த விடயத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஏற்றுக் கொண்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட கூட்டங்களுக்கு திலங்க சுமதிபால அழைக்கப்படவில்லை எனவும், ஜயந்த தர்மதாஸவே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்ததாகவும் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால தகுதியற்றவர் என அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர் அர்ஜுண ரணதுங்க அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளுமாறு தான் திலங்க சுமதிபாலவிற்கு அறிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்துள்ளார்.