நெசவு கைத்தொழிலினை விருத்தியடைய செய்யவேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன : சிப்லி !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் , ஹைதர் அலி 

 

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நெசவு கைத்தொழில் நிலையத்திற்கு விஜயமொன்றை வெள்ளிக்கிழமையன்று (19.02.2016) மேற்கொன்று அங்குள்ள அதிகாரிகளையும் பயனாளிகளையும் சந்தித்து நெசவு நிலையத்தின் குறைபாடுகள், அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டதுடன் நிலையத்தினையும் பார்வையிட்டார். இவ்விஜயத்தின்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இப் பிரதேசத்தில் அனேகமானவர்கள் நெசவு கைத்தொழில் தெரிந்தவர்கள் இருக்கின்றனர், ஆகையினால் நெசவு தொழிலினை விருத்தியடைய செய்யவேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன, முன்னைய காலம்போல் அல்லாது தற்பொழுது இந்த நேசவினால் நெய்யப்படுகின்ற சாரங்கள், புடவைகள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புக்கள், போர்வைகள், துவாய், கைக்குட்டைகள் போன்ற பல பொருட்களுக்கு பாரிய கிராக்கி காணப்படுகின்றது, எனவே உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவைகள் இருக்கின்றன, ஆகையினால் இங்கு கைத்தறி இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

01_Fotor

 

மிக அண்மையில் நாங்கள் ஆரம்பித்து வைத்த வீதிக்கு ஒருநாள் வேலைத்திட்டம் என்ற நிகழ்ச்சியினூடாக நாங்கள் வீடு வீடாக சென்று அவதானித்த விடயம் என்னவென்றால் 100 வீடுகளுக்கு சென்றால் அதில் கிட்டத்தட்ட 30வீதமான பெண்கள் விதவைகளாகவும், கணவன்களால் கைவிடப்பட்டு பிரிந்து வாழ்கின்ற கவலையான நிலைமையினை அவதானிக்க முடிந்தது. இவ்வாறாக சில நாட்களின்முன் ஒரு பெண்மணி என்னிடம் கூறினார் அவருக்கு வயது 34ஆகின்றது அதற்குள் இரண்டு தடவைகள் திருமணம் முடித்து கணவனால் கைவிடப்பட்டுள்ளேன் மேலும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர் எவ்விதமான வருமானமும் இல்லை ஆகையினால் பிள்ளைகளை படிப்பிப்பதற்கு முயாமல் உள்ளது எனவே அவர்களை கடையில் வேலைக்கு அமர்த்தபோகிறேன் என்ற ஓர் கவலைக்குரிய நிலைமை இப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. இங்குள்ள தாய்மார்கள், இளம்வயதில் திருமணம் முடிக்கும் பிள்ளைகளுக்கு குடும்ப வாழ்க்கையினை சிறந்த முறையில் கொண்டு நடத்துவதற்குரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் இது ஓர் பாரிய பிரச்சனையாக ஏற்பட்டுகொண்டிருகின்றது. 

 

மேலும் எமது சமூகத்தினரை கல்வியில் முன்னேற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது, தற்காலத்தில் க.பொ.த. சாதாரண தரம் பரீட்சை முடிந்ததும் அம்மாணவர்களுக்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் இலவசமாக வழிகாட்டி கருத்தரங்குகளை மேற்கொண்டு இரண்டு வருடங்களுக்கு மேல் உயர்கல்வி கற்க வேண்டும் அதன் பெறுபேறுகளுக்கு பின் மூன்று அல்லது ஐந்துவருடங்கள் பல்கலைகழகம் செல்ல வேண்டும் அதன்பின் வேலைக்காக 2 அல்லது 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும் எனவே கிட்டத்தட்ட 8 அல்லது 9 வருடங்களின் பின்னரே உழைக்க முடியும், ஆகவே சாதாரண தர பெறுபேறுகளை கொண்டு குறுகியகால பாடநெறிகளை முடித்துக்கொண்டு கட்டார், துபாய் போன்ற வளைகுடா நாடுகளுக்கு சென்றால் பல இலட்சம் ஊதியம் பெறமுடியும் என்று கூறியதுடன் அவர்களை அங்கு சென்று தமது வாழ்க்கையினை தொலைத்து கொண்டு இருகின்றனர்.

02_Fotor

 

ஏனெனில் தற்பொழுது வளைகுடாவில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 25 டொலராக குறைந்துள்ளது இதனால் அங்குள்ள கம்பனிகளின் உரிமையாளர்கள் வருமானம் குறைந்துள்ளது என்று கூறி அனைவரினதும் சம்பளத்தினை குறைத்துள்ளோம் விரும்பினால் தொழில் செய்யலாம் இல்லாவிடின் நாட்டுக்கு சென்று விடலாம் என்று கூறுகின்றனர், இவ்வாறான நிலை தொடர்ந்து 2 அல்லது 3 வருடங்களுக்கு தொடருமாக இருந்தால் வளைகுடா நாடுகளிலில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யக்கூடிய நிலைமை தோன்றும் இதனால் எமது பிரதேச, மற்றும் இலங்கையில் இருந்து அங்கு செல்லமுடியாத நிலை தோன்றும். ஆகவே எமது முஸ்லிம் சமூகத்தின் கல்வியினை மேம்படுத்த வேண்டும் அதற்காக அவர்கள் சாதாரண தரம் வரை மட்டும் இல்லாமல் உயர்தரம் வரை கல்விகற்று பல்கலைகழகம் வரை அல்லது அதன் வெட்டுப்புள்ளி வரை பெறுபேறுகளை பெற்ற பின்பு அவர்களது தொழில் விடயங்களில் கவனம் செலுத்த நாம் அனைவரும் பாடுபட வேண்டும். மேலும் எமது குடும்ப விடயங்களை எமது பிள்ளைளில் திணிக்காமல் அவர்களிடம் அன்பாகவும் சரியான வழிகாட்டுதல்களை வழங்கி சமுகத்தில் சிறந்தவர்களாக மாறுவதற்கு நாம் பாடுபடவேண்டும் என தன்னுரையில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கவர் போட்டோ_Fotor