நாட்டின் கரையோர பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பகுதியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதன் ஒரு அங்கமே வில்பத்து காடழிப்பு என பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
பொது பல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திலாந்த விதானகே இங்கு மேலும் கூறுகையில்,
நாட்டில் தற்போது கரையோர பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இதனால் இன்று நாட்டின் கரையோர பிரதேசங்களில் மூன் றில் இரண்டு பகுதியை தமிழ், முஸ்லிம் மக்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால் நாட்டின் சிங்களவர் எங்கு செல்வது. இது தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தினால் நாம் இனவாத அமைப்பாக அடையாளப்படுத்தப் படுகிறோம். ஆக்கிரமிப்பின் ஒரு அங்கமாகத்தான் வில்பத்து பிரதேசத்தில் காடழிப்பு செய்யப்பட்டு குடியிருப்புக் கள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதிக்கும், தற்போதைய ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்த போதும் அவர்கள் இருவரும் அசமந்த போக்கினையே கடைப்பிடித்தனர்.
அதனால் இன்று வில்பத்து பிரதேசத்தில் காடழிப்பு செய்யப்பட்டு கட்டார் நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரின் பெயரிடப்பட்ட குடியிருப்பு தொகுதி ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளையே நாம் எதிர்க்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகளுடன் செய்யப்படும் ஒப்பந்தங்களின் வாயிலாக பெறப்படும் கடன் உதவிகளை பெற்று அவற்றாலும் முஸ்லிம் இனத்தவர் மட்டுமே குடியேற்றப்படுகின்றனர்.
இவ்வாறான இனவாத செயற்பாடுகள் நாட்டில் தொடர்ந்தும் இடம் பெறக்கூடாது. அனைத்து இன மக்களும் ஒரே வித் தில் பார்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
நாட்டின் தேசிய உரிமைகளை பாதிக்கும் இது போன்ற செயற்பாடுகள் தொடர்பில் பேசிய போதெல்லாம் நாம் இனவாதிகளாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளோம்.
ஆனால் இப்பொழுது பாராளுமன்றத் தில் ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரான சஜித் பிரேமதாஸவும் குறித்த விடயம் தொடர்பில் பேசுவது மகிழ்ச்சியளிக்கின்றது என்றார்.