உதுமாலெவ்வை அக்கரைப்பற்று கல்வி பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர் : தவம் !

ரியாஸ் இஸ்மாயில் 

 

கடந்த காலத்தில் அக்கரைப்பற்றுக் கல்வி வீழ்ச்சிக்கு காரணமானவர்களில் ஒருவரான உதுமாலெவ்வை இன்று அக்கரைப்பற்று கல்வி பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைஅமர்வு  இன்று  (23) தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வை கொண்டுவந்த தனி நபர் பிரேரணை மீது உரையாற்றும் போதே மாகாண சபை உறுப்பினர் தவம் மேற்கண்டவாறு இங்கு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு கூறுகையில், 

thavam uthumaan

கடந்த காலத்தில் ஏ.எல்.இக்பால் எனும் அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு பாடசாலையின் அதிபராக நியமனம்வழங்கப்படுவதற்காக தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நியமனக் கடிதத்தை, குறிப்பிட்டவர் மாற்று அரசியல் கருத்துடையவர்என்பதற்காக தடுத்து நிறுத்தியவர்தான் இந்த உதுமாலெவ்வை. அதேபோல, ஏ.எம். சித்தீக் எனும் உடற்பயிற்சி ஆசிரியர், வேறுகட்சியொன்றின் ஆதரவாளர் என்ற காரணத்திற்காக ஒரு மாத காலத்தினுள் ஆறு தடவைகள் இடமாற்றக் கடிதங்கள்வழங்கப்பட்டு, இறுதியில் அக்கரைப்பற்று வலயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறி, இன்று திருக்கோவில் வலயத்தில்கடமையாற்றுகிறார். ஆனால். அக்கரைப்பற்றில் இன்று கடுமையான உடற்பயிற்சி ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக்காரணமும் இதே உதுமாலெவ்வை அவர்கள் தான். அக்கரைப்பற்றுப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி பாடசாலைகளை ஆளணிமற்றும் பௌதீக வளத் தட்டுப்பாட்டில் விட்டு விட்டு, நியாயமாக இப்பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய வளங்களையும்,தங்களுக்கு வேண்டிய சில இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கி, அக்கரைப்பற்றின் கல்வியை பின்னடயச்செய்வதில் பின்னணியில் இருந்ததும் இதே உதுமாலெவ்வை தான். 

 

இப்படி அக்கரைப்பற்று கல்விக்கு உதுமாலெவ்வை செய்த அநியாயங்களை அடுக்கிக் கொண்டு செல்ல முடியும். அப்படிஇருக்கும் போது, அக்கரைப்பற்றில் ஒரு பாடசாலையில் அரசியல் செய்த அதிபரை, அதுவும் அவரே உத்தியோகபூர்வமாகஇடமாற்றக் கடிதம் வழங்கிய ஒரு அதிபரின் இடமாற்றத்தையும், பொத்துவில் கோட்டத்திலிருந்து சுயவிருப்பத்தின் பேரில்அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்ட அதிபரின் இடமாற்றத்தையும் பற்றி பேசுவது நகைப்புக்குரியவிடயமாகும். 

 

ஊடகங்களில் தனது பேச்சு வர வேண்டும் அதனூடாக தான் தனது அரசியலை முன்கொண்டு செல்லவேண்டுமென்ற அரசியல் வங்குரோத்துத்தனத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். உதுமாலெவ்வை அமைச்சுப்பதவியை இழந்து இருக்கின்ற நிலையில், தனக்கு வேறு வழி தெரியாமல் இவ்வாறான இழிவான அரசியலை அவர் செய்துகொண்டிருக்கிறார் என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதை உதுமாலெவ்வை அறியாமல் இருப்பது அவர்தவறு. கடந்த மூன்று தினங்களாக இலத்திரனியல் ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் உதுமாலெவ்வை கொண்டுவந்துள்ள மூன்று தனிநபர் பிரேரனைகள் பற்றிப் பார்த்தேன். 

 

ஆயிரத்திற்கு மேற்பட்ட தனிநபர் பிரேரணைகள் இதுவரைக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவை இவ்வாறு ஊடகங்களில்முன்கூட்டிக் போடப்படுவதில்லை.இந்த சிறு பிள்ளைத்தனத்தை பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது. பாவம் அவர் பதவிஇல்லாமல் அவஷ்த்தைப்படுவதைப் படுகிறார் எனவும் அவர் மேலும் இங்கு கூறினார்.