அரசியலமைப்புக்கான புதிய யோசனைகளில் தனியான முஸ்லிம் மாகாண கொள்கையை உள்ளடக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சியின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத் இந்தக்கருத்தை வலியுறுத்தியிருந்தார். இது காங்கிரஸின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது என்றும் ஹசன் அலி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே உள்ள 9 மாகாணசபைகளில் ஒரு தமிழ் மாகாணம் என்பதற்கு உடன்பாடுள்ளது. எனவே தனியான முஸ்லிம் மாகாணம் தொடர்பில் சிந்திக்கப்பட வேண்டும் இதேவேளை மாகாண அமைப்புக்களின் போது பௌதீக மற்றும் சனத்தொகை பரம்பல் என்பவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஹசன் அலி கோரியுள்ளார்.
பௌதீக ரீதியாக இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்