CSN தொலைக்காட்சி நிறுவனத்தில் முகாமைத்துவத்தை மாற்றுவதற்கு முயற்சி !

 CSN_Yositha_mini-720x480_Fotor
பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் CSN தொலைக்காட்சி நிறுவனம், அதன் முகாமைத்துவத்தில் மாற்றம் செயற்பட்டுள்ளது.

தற்போது ரெட் வானொலியை விற்பனை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச அரசாங்கத்தின் தோல்விக்கு பின்னர் ஆரம்பமாகிய நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பல முறை CSN நிறுவனத்திற்கு கீழ் உள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலியின் முகாமைத்துவத்தை மாற்றுவதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

CSN நிறுவனத்தின் ஊடாக தற்போது தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக சிங்க வானொலி, ரெட் வானொலி மற்றும் தமிழ் வானொலி ஆகியவைகள் செயற்படுத்தப்படுகின்றது. 

இதேவேளை CSN தொலைக்காட்சி பிரதானிகளை கைது செய்யும் போதும் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவு பக்கசார்பாக செயற்பட்டுள்ளதாகவும், அதற்காக தற்போதைய நல்லாட்சி அரசாங்க அமைச்சரின் ஆதரவுகள் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் யோசித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.