பி.எம்.எம்.ஏ.காதர்
சமூக மேம்பாட்டுக்காகவும்,இன நல்லுறவுக்காகவும் தங்களை அர்பணித்துச் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸடீன்,ஏ.எல்.எம்.சலீம்; ஆகியோருக்கு’சமாதானத் தூதுவர்’ விருது வழங்குவது மிகவும் பொருத்தமானதாகும் என சமூக சேவையாளரும்,வர்த்தகப் பிரமுகருமான எம்.ஐ.ஏ.பரீட் தெரிவித்தார்.
இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தினால்’;சிரேஷ்ட ஊடகவியலாளர்களான அக்கரைப்பற்று மீரா எஸ் இஸ்ஸடீன்,நிந்தவூர் ஏ.எல்.எம்.சலீம்; ஆகியோர் 2016ஆம் ஆண்டுக்கான’சமாதானத் தூதுவர்’விருது வழங்கி கௌரவித்த நிகழ்வில் விஷேட விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வு சமாதானக் கற்கைள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில்; நிலையத்தின் சம்மாந்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை(20-02-2016)இடம்பெற்றது.
இதன்போது சமூக சேவையாளரும்,வர்த்தகப் பிரமுகருமான எம்.ஐ.ஏ.பரீட் ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸடீன்,ஏ.எல்.எம்.சலீம்; ஆகியோருக்கு இந்த ‘சமாதானத் தூதுவர்’ விருதை வழங்கி கௌரவித்தார்.
ஊடகத்துறையின் மூலமாக இன நல்லுறவுக்கும்,சமாதானத்திற்கும் நீண்ட காலமாக இவர்கள் இருவரும் ஆற்றிவரும் பெரும் பங்களிப்புக்காகவே இவர்களுக்கு இந்த ‘சமாதானத் தூதுவர்’; விருது வழங்கப்பட்டது.
இங்கு வர்த்தகர் பரீட் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :- ஊடகத்துறை மூலம் பிரதேச ஊடகவியலாளர்கள் பெரிய அளவில் வருமானத்தை பெற முடியாது ஊடகப்பணி என்பது ஒரு சமூக சேவைப் பணியாகும் இந்தப் பணியின் மூலமாக பலர் உயர்ச்சி பெறுகின்றனர் ஆனால் இரவு பகலாகப் பாடுபடுகின்ற ஊடகவியலாளர்கள் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கின்றனர்.
சமூக சீர்திருத்தத்திற்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்ற ஊடகவியலாளர்களை சமூகம் கண்டும் காணாமல் இருந்து விட முடியாது ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைக்க சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும் அந்த வகையில் சமாதானக் கற்கைள் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சகோதரர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இந்த ‘சமாதானத் தூதுவர்’ விருது வழங்கி கௌரவிப்பதைப் பாராட்டுகின்றேன் என்றார்.
இந்த நிகழ்வில் கெப்சோ நிறுவனத்தின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார்,சட்டத்தரணிகளான எம்.எஸ்.முஸ்தபா,அன்வர் சியாட்,தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் அன்வர் முஸ்தபா,கல்முனை பிரதேச செயலக சிரேஷ்ட திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,சிரேஷ்;ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா,ஊடகவியலாளர் எம்.சி.அன்சார்,வர்த்தகர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இலங்கை சமாதானக் கற்கைகள் நிலையத்தின் விருது வழங்கும் திட்டத்திற்கான இணைப்பாளர் யூ.எல்.றிஷாட் மற்றும் பரீஸ் முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.