ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, வேண்டாமா? பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு : பிரதமர் !

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, வேண்டாமா? என்பதை தீர்மானிக்கக்கூடிய வகையில் ஜூன் 23-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
2-Cameron-AFPGet_Fotor
 
சமீபத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றி ஆய்வு செய்யும் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய டேவிட் கேமரூன்,  “ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருந்தால் இங்கிலாந்து பாதுகாப்பாகவும், வளமாகவும், வலிமையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்துக்கும் வலிமையற்றதாக மாற்றிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரத்தில் மக்களின் கருத்தை அறியும் வகையில் வரும் ஜூன் 23-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.