சரத் என் சில்வா மஹிந்தவை மீளவும் ஆட்சியில் அமர்த்துவதற்காக முயற்சிக்கின்றார் : சதுர சேனாரட்ன !

chathutra senaratne
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் நகைப்பிற்குரியது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வார இறுதி சிங்கப் பத்திரிகையொன்றக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சரத் என் சில்வா கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு  எதிராக குரல் கொடுத்து அதனை மாற்றியமைக்க வேண்டுமென கோரியிருந்தார். எனினும் தற்போது மஹிந்தவை மீளவும் ஆட்சியில் அமர்த்துவதற்காக  முயற்சிக்கின்றார். 

முன்னாள் பிரதம நீதியரசரின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் பதற்றமடைய  வேண்டியதில்லை.

சரத் என் சில்வா,  ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகடளுடன் இணைந்து கடந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக திட்டங்களை வகித்திருந்தார். 

ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை வழக்கில் மஹிந்தவை 2005ம் ஆண்டு சிறையில்  அடைத்திருந்தால் நாட்டுக்கு அழிவு ஏற்பட்டிருக்காது எனவும் அதற்காக நான்  வருந்துவதாகவும் சரத் என் சில்வா கூறியிருந்தார்.

மஹிந்தவை தண்டிக்காமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய ஒரே பிரதம நீதியரசர்  சரத் என் சில்வா எனவும்  தற்போது மஹிந்தவை ஆட்சி பீடம் ஏற்ற  முயற்சிப்பதாகவும் சதுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.