மஹிந்தவினால் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 1134 லட்சம் ரூபா நஷ்டம் !

 

mahintha family
FILE IMAGE
 
 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட விமான பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் இன்றும் நிலுவைாயக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு, ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிடைக்க வேண்டிய 1134 லட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வருடத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் வெளிநாட்டு பயணங்களுக்காக, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கப்பட வேண்டிய பண நிலுவையில், மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பயணங்கள் பலவற்றின் செலவுகளும் இணைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுதலுக்காக இந்தியா, திருப்பதி கோயிலுக்கு சென்றமைக்காக 34 லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் மேலும் பல பயண செலவுகள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டி பணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி செயலாளரினால் அந்த பணம் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு செலுத்தாமையினால் 2007ஆம் அந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்திற்கு கடுமையான நிதி தட்டு ஏற்பட்ட நிலையில் சேவைகளை பெற்று கொண்ட பல நிறுவனங்களுக்கு பணம் செலுத்த தவறியுள்ளதாக கடந்த 12ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழுவின் போது தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு பணம் செலுத்த வேண்டிய நிறுவனங்களுக்குள் வெளியுறவு அமைச்சிற்கு 283 லட்சமும் இலங்கை விமான படைக்கு 5 லட்சமும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகத்திற்கு 450 லட்சம்  மற்றும் சுற்றுலா வாரியத்திற்கு 24 லட்சம் செலுத்தப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டோக்கியோ, மாலே, பேங்கொக் மற்றும் சீஷேல்ஸ் ஆகிய பல நாடுகளுக்கான தனிப்பட்ட பயணங்களுக்கான செலுவுகளும் இதனுள் சேர்க்கப்பட்டுள்ளது.

அரசாங்க தலைவரின் பணிக்காக பயணங்களுக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படுகின்ற தனிப்பட்ட பயணங்களுக்கான செலவுகளை ஒரு போதும் ஜனாதிபதி செயலகத்தின் மூலம் செலுத்தப்படுகின்ற அரசாங்க செலவுகளுடன் சேர்க்க முடியாதென கோப் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.