இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த, உதவி கிட்டியுள்ளது.
ஜேர்மன் – இலங்கைக்கு இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிதியில் ஆறு மில்லியன் யூரோ வில்பத்து சரணாலய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும், வடக்கு, கிழக்குக்காக நான்கு மில்லியன் யூரோவும், 2.4 மில்லியன் யூரோ சிறிய மற்றும் மத்தியதர தொழிற்துறை முன்னேற்றத்திற்காகவும் மீதமுள்ள 0.6 மில்லியன் யூரோ உள்ளூராட்சி மன்ற மற்றும் பேராசிரியர்கள் போன்றோருக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மேலும் ஒரு மில்லியன் யூரோ விஷேட வேலைத்திட்டத்திற்காக வழங்கப்பட்டவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் ஜேர்மனுக்காக விஜயத்தின் இறுதி நாளான இன்று அவர் வர்த்தகர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த சந்திப்பில் 250 ஜேர்மனிய மற்றும் 32 இலங்கை வர்த்தகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.