ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கலுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளது : ஜனாதிபதி !

ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கலுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் அரசாங்கம் வழங்கவுள்ள உதவிகளுக்காக நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

maithri angela german

இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் முதலீட்டு வாய்ப்புக்களில் பயன்பெற்றுக் கொள்ளமாறு ஜெர்மன் முதலீட்டாளர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். 

ஜெர்மனியில் 150 வருட கால பௌத்த வரலாறு காணப்படுகின்றது. 

இலங்கையில் நிலவி வரும் சிறுநீரக நோய்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ஜெர்மன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். 

இலங்கையில் அனைத்து இன சமூகங்களும் சமாதானமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. 

எனவே, ஜெர்மனியில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென அழைப்பு விடுக்கின்றேன். 

குறிப்பாக போர்ச் சூழலில் நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் மக்கள் நாடு திரும்ப முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் ஜெர்மனியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.