நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான செயற்பாடுகளினால் அரசின் ஆயிட்காலமானது குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மஹிந்த ஆதரவு எம்பியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பந்துள குணவர்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிடுகையில்
நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் உட்பட நாட்டிற்கு எதிரான தொடர்ச்சியான எதிர்மறையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் மக்களை தெளிவுப்படுத்தும் நோக்குடனும் ஒன்றினைந்த எதிர்க்கட்சியினரினால் நாடளாவிய ரீதியில் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையானது கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் எமது இந்த செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு ரீதியில் மக்கள் போரட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
அந்தவகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கையின் நிலைப்பாட்டையே நாம் இவ்வாறு தேங்காய்களை உடைப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.
அந்தவகையில் இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக சர்வதேச ரீதியாக இந்த அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக சிங்கப்பூரில் இதனை முன்னெடுக்கவுள்ளோம். தொடர்ந்தும் இதனை முன்னெடுப்போம் என்றார்.