இலட்சக் கணக்கான மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் : தினேஷ் !

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீர்கொழும், கொச்சிகடே ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்றஉறுப்பினர்கள் சந்திப்பொன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

dinesh gunawardene thinesh

எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் எதிராக லட்சக் கணக்கான மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும்.

முற்போக்கான இடதுசாரி கட்சிகள் அனைத்தினதும் ஒத்துழைப்பின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கூட்டணியில் பயணிக்க இணங்குகின்றோம் என தினேஸ் குணவர்தன உறுதிளித்துள்ளார்.