அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு !

parliament
அமைச்சுக்களை மேற்பார்வை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேடகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.

அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிப்பதற்காக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பத்து குழுக்களை நியமிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.

இந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதுடன் இந்தக் குழுக்களுடன் அனைத்து அமைச்சுக்களையும் தொடர்பு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஒரு குழுவிற்கு இரண்டுக்கும் மேற்பட்ட அமைச்சுக்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.

அமைச்சுக்களின் எந்தவொரு விடயத்தில் தலையீடு செய்யவும் கேள்வி எழுப்பவும் இந்தக் குழுக்களுக்கு உரிமையுண்டு.

அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் இந்தக் குழுக்களின் அனுமதி அவசியமாகின்றது.

எந்தவொரு அமைச்சின் அமைச்சரையோ அல்லது ஏனைய அதிகாரிகளையோ அழைத்து கேள்வி கேட்பதற்கு இந்த குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி இந்தக் குழுக்கள் தொடர்பில் நாடாளுமன்றின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்ளுக்காகவும் மூன்று நாள் விசேட செயலமர்வு ஒன்று இன்று முதல் நடத்தப்பட உள்ளது.

இங்கிலாந்தின் நாடாளுமன்ற குழு ஒன்றினல் செயலமர்வு நடத்தப்பட உள்ளது. 

நாடாளுமன்றில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கின் போது அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கண்காணித்தல் மற்றும் சட்ட மூலங்களை இயற்றுதல் போன்றன குறித்து விசேட தெளிவூட்டல்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.