இலங்கையின் 29ஆம் சட்ட மா அதிபராக ஜெனரல் ஜயந்த ஜயசூரிய இன்று பதவிப் பிரமாணம்!

jejasurija
இலங்கையின் 29ஆம் சட்ட மா அதிபராக சிரேஸ்ட சொலிசுட்டர் ஜெனரல் ஜயந்த ஜயசூரிய சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜயந்த ஜயசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜயந்த ஜயசூரியவை சட்ட மா அதிபராக நியமிக்குமாறு அரசியலமைப்புப் பேரவை நேற்று பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரியின் முன்னிலையில் ஜயந்த ஜயசூரிய இன்று சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக ஜெயந்த ஜெயசூரிய இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே பதவியில் இருந்த சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர கடந்த ஜனவரி 10ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற நிலையிலேயே புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த பதவிக்கு பதில் சட்டமா அதிபராக செயற்பட்டு வந்த சுகத கம்லத் நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதும், ஜெயசூரியவின் பெயரை நேற்று அரசியலமைப்பு சபை, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. 

இதனடிப்படையில் இலங்கையின் 45ஆவது சட்டமா அதிபராக ஜெயசூரிய இன்று பதவியேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.