பத்தாவது தடவையும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அழைப்பை சுகாதார அமைச்சர் ராஜித தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த கால ஆட்சியின் போது மீன் பிடி அமைச்சராக பதவி வகித்த தற்போதைய சுகாதார அமைச்சர் அப்போதைய சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவினால் பல தடவைகள் விசாரணைக்காக அழைக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதியும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் ராஜித பல காரணங்களை முன் வைத்து விசாரணைக்கு செல்வதை தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தத்தடவையும் அமைச்சருக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரின் விசாரணை அழைப்பு விடுக்கப்பட்ட போது தான் ஜனாதிபதியுடன் அவசரமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் எனவே தனக்கான விசாரணையை வேறொரு நாளுக்கு மாற்றும் படியும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.