அஷ்ரப் ஏ சமத்
கம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் உள்ள மையவாடியில் தமக்கென்று ஒரு வீடொன்று இல்லாமல் அங்கு உள்ள ஒரு இடத்தில் மூவரைக் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருவதாகவும் அவா்களது குழந்தை அம் மையவாடியில் குப்பி லாம்பில் தமது பாடசாலை பாடப்புத்தகங்களை கற்பதும்மான சோகச் சம்பவம் ஒன்று கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகையில் ஆக்கம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அக் ஆக்கத்தை அவதாணித்த அமைச்சா் சஜித் பிரேமதாச இன்று (10) புதன் கிழமை பொதுமக்கள் சந்திப்பின்போது. அக்குடும்பத்தினரை வீடமைப்பு அமைச்சிற்கு அழைத்து வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இலவசமாக வீடுகளை நிர்மாணிக்கவென செவன உதவித் திட்டத்தின் கீழ் வீடொன்றை நிர்மாணிக்கவென 2 இலட்சம் ருபா காசோலை வழங்கி வைத்தாா்.
ஏற்கனவே இச் செய்தியை அறிந்த ஒருவா் இக்குடும்பத்திற்கென காணித்துண்டொன்றை வழங்கியிருந்திருந்தாா். இவ் வீட்டினை கம்பஹா மாவட்ட முகாமையாளா் கண்காணிப்பில் எதிா்வரும் புதுவருடத்திற்கு முன் இவ் வீடு நிர்மாணிகக்பபட உள்ளது.