ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை இழக்கக் கூடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் எட்டு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் நோக்கில் விசேடமத்திய செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜெர்மன் விஜயத்திற்கு முன்னதாக இந்த விசேட கூட்டம் நடத்தப்பட உள்ளது.
கட்சியின் நடவடிக்கைகளையும் கட்சியின் தலைமைத்துவத்தையும் பகிரங்கமாக விமர்சனம் செய்து வரும் எட்டு உறுப்பினர்களுக்கு எதிராக இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கட்சியின் ஒழுக்காற்று குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் உறுப்புரிமையை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் விபரங்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இவ்வாறு கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட உள்ளது.