அம்பாரை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மை பக்றீரியா இலைவெளிறல் நோயினால் சேதம் !

எம்.எம்.ஜபீர்
அம்பாரை மாவட்டத்தில் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மைகளின் மடலில் ஒருவகை வெளிறல் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்நோய் ஏரி-362 ரக சிவப்பு நெல் இனத்தையே கூடுதலாக பாதித்துள்ளது. 
9_Fotor
இதனால் இம்முறை பெரும்போகத்தில் வேளாண்மை செய்கையில் நஸ்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த விவசாய திணைக்கள அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அம்பாரை மாவட்டத்தில் இந்நோய்த்தாக்கத்திற்கு சாதகமான காலநிலையான சூடான மற்றும்
குளிரான  காலநிலை நிலவுவதால் அதிகமாகும் வாய்புள்ளதாகவும், இதனை எந்த விதமாக கிருமிநாசினிகளை விசுறுவதாலும் கட்டுப்படுத்துவதற்கு முடியாத நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
10_Fotor
இதேவேளை இந்நோயின் அறிகுறிகளாக இலைமடல் மேற்புறமாக இருந்து இரு அருகுகளும் கருகும் அத்துடன் பக்றீரியா கலங்கள் சிறு சிறு திட்டுக்களாக அதிகாலையில் சூரிய ஒளியில் மின்னுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக விவசாயிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
10_Fotor