கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இடமாற்றப்படாது !

83174_thalatha-ahtukorala-01

 

 கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்ற எடுக்கும் நடவடிக்கையினை தடுப்பதற்குரியது சந்திப்பு (இன்று) பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது .

இக் கலந்துரையாடல் பற்றி கருத்து தெரிவித்த சுகாதர பிரதி அமைச்சர் பைசால் காசிம்…

” கடந்த வாரம் அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களுடன் இவ் விடயம் பற்றி பேசியதை தொடர்ந்து அவர் இன்று இவ் விடயம் பற்றி தீர்க்கமான முடிவு ஒன்றினை பெருவதவற்கு சந்திக்குமாறு கூறினார்.

இதனை தொடர்ந்து இன்று விளையாட்டு துறை பிரதி அமைச்சர் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோருடன் இன்று சந்தித்தோம் , அவர் இவ் இடமாற்றம் இடம் பெறாது என உறுதிகூறியுள்ளதுடன்.

தற்போது இயங்கி வரும் கட்டிடத்தினை மாற்றி கல்முனையில் வேறு ஒரு கட்டிடத்தில் இவ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்வரும் காலங்களில் இயங்கும் எனவும் கூறினார்.

எனவே இவ் விடயம் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை இவ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கல்முனையில் பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கவுள்ளது “

முஹம்மத் ரிஷ்னாத்