அஸ்ரப் .எ.சமத்
வடக்கில் வாழ்ந்த முஸ்லீம்களை 26 வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் வேளியேற்றியவா்களது மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறும் கூறி வடக்கு முஸ்லீம் அமைப்பு கொழும்பு 7 ல் உள்ள ஜக்கிய நாடுகள் அமையத்தின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று (9) மு.பகல் 01 மணிவரை யில் நடைபெறுகின்றது.
இப் ஆர்பாட்டத்தின் போது இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளாரை சந்தித்து தங்களது அறிக்கையை வழங்குவதற்கு சா்ந்தா்ப்பம் பெற்றுத் தருமாறும் ஆர்பாட்டக் காரா்கள் தெரவித்தனா். வடக்கு முஸ்லீம்களது பிரச்சினைகளை அவதானம் செலுத்து மாறும் 1990 களில் இடம் பெயா்ந்த முஸ்லீம்களது பிரச்சினையிலும் மீள் குடியேற்றம், இழப்பீடு மனித உரிமை மீறல்கள் எங்களுக்கு நிவாரம் பெற்றுத் தருமாறும் அரசாங்கம் சர்வதேச சமுகம் தலையிட்டு எங்களது காணி சொத்து வீடுகள் இருப்பிடம் பெற நடவடிக்கை எடுக்குமாறும் சுலோகங்களை ஏந்தி கோசமிட்டனா். இதில் முஸ்லீம் பெண்கள் ஆண்கள் புத்தளம் இருந்து வந்து இவ் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தற்பொழுது ஜக்கிய நாடுகள் அலுவலகத்தில் ) ஆணையாளா் இளவரசா் ஹூசைன் ஊடக மாநாடு ஜக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரா்கள் ஆணையாளரை சந்திப்பதற்கு வீதியில் குவிந்து நின்றாலும் பாதுகாப்புப் பிரிவினா் கொழும்பு அலுவலக அலுவத்தின் பின்புரமாக உள்ள பொலிஸ் பாா்க் பாதை ஊடாக ஆணையாளா் சென்றுள்ளாா். வடக்கு முஸ்லீம்களது அறிக்கையை வடக்கு முஸ்லீம்களது அமைப்பின் தலைவா் அமீன் மற்றும் சுபியான் ஆகியோா்களிடமிருந்து கொழும்பு அலுவலகத்தின் அதிகாரி பெற்றுக் கொண்டாா்.