ராஜபக்ஸக்களை அரசியல் ரீதியாக அழித்துவிட முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தம்மை கொலை செய்தாலும், சிறையில் அடைத்தாலும் ராஜபக்ஸக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ராஜபக்ஸக்கள் கடந்த 80 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யோசித ராஜபக்ஸவிற்கு கடற்படையில் விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பணத்தை கொள்ளையிட்டு பாரியளவில் சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை முடிந்தால் நிரூபித்துக் காட்டட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு சட்டவிரோதமானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புதிய அரசியல் கட்சியொன்றின் அவசியம் வெகுவாக எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை அரசாங்கத்தினால் அடையாளம் காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்ஸக்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்;சாட்டை முற்று முழுதாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.