சட்டவிரேதமான முறையில் புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த இரு வேறு படகுகள் துருக்கி கடற்பரப்பில் வைத்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்திற்கு அருகில் இடம்பெற்ற படகு விபத்தில் 22 பேரும், ஏஜியன் கடற்பரப்பில் இடம்பெற்ற மற்றுமொரு படகு விபத்தில் 11 பேர் உள்ளடங்கலாக 33 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ரீஸ் தீவான லெஸ்பாஸ்க்கு செல்ல முயற்சித்த புகலிட கோரிக்கையாளர்களின் படகுகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டு யுத்தம் காரணமாக சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் புகலிடம் கோரி சட்டவிரேதமான முறையில் படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் படகுகள் விபத்துக்குள்ளாகுவதும், அதன் காரணமாக அதிகளவான உயிர்கள் காவுகொள்ளப்படுவதும் அண்மைய காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.