சயிட் அல் ஹூசெய்ன், பாதுகாப்பு தரப்பினருடன் இன்றைய தினம் சந்திப்பு !

Zeid Raad al-Hussein

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், பாதுகாப்பு தரப்பினருடன் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இந்த விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆணையாளருக்கும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையில் சுமூகமான அடிப்படையில் சந்திப்பு நடத்தப்பட்டதாக, பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், கூட்டுப் படைகளின் கட்டளைத்தளபதிகள், முப்படைகளின் தபளதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, அல் ஹூசெய்னுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி கௌரவித்துள்ளார்.