மகிந்த ராஜபக்சவுக்கும் ரணிலுக்கும் இடையில் மற்றுமொரு தொலைபேசி உரையாடல் !

mahinda-rajapaksa-ranil-wickramasinghe-1
 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட போவதை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிணை பெற முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து பிரதமர் ரணில், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்துள்ளார்.

எனினும் யோஷித்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் என்பதால், பிணை பெறுவதும் சிரமம் எனவும் பொது சொத்துக்களை பயன்படுத்தியமை, பண சலவை என்பன பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் என அதிகாரிகள், பிரதமரிடம் விளக்கியுள்ளனர். 

இதன் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மற்றுமொரு தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. 

கிடைத்து வரும் தகவல்களின் அடிப்படையில் யோஷித்த ராஜபக்சவுக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

நிதி குற்றச்சாட்டின் அடிப்படையில், பண சலவை சட்டம் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சீ.எஸ்.என் தொலைக்காட்சியை ஆரம்பிக்க 2 ஆயிரத்து 340 லட்சம் ரூபா பணத்தை எப்படி பெறப்பட்டது என்பதை உறுதிப்படுத்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் தவறியுள்ளனர். 

பண சலவை மற்றும் பொது சொத்துக்கள் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற போதிலும் அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. 

இதற்கு மகிந்த – ரணில் தொலைபேசி உரையாடலின் பிரதிபலனாக இருக்குமோ என்ற பாரதூரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது