டுவிட்டரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான 1¼ லட்சம் கணக்குகள் முடக்கம் !

isis-twitter-anonymous-opisis-xrsone

 

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் 1¼ லட்சம் கணக்குகள் டுவிட்டரில் முடக்கப்பட்டுள்ளன.

‘டுவிட்டர்’ சமூக இணையதளத்தில் கணக்குகள் தொடங்கி தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதே நேரத்தில் தீவிரவாத இயக்கங்களும் இதை பயன்படுத்தி தங்களது செய்திகள் மற்றும் கொள்கைகளை பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதை தடுக்கும் வகையில், ‘டுவிட்டர்’ இணையதளத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவை ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அதன் அமைப்புடன் தொடர்பு கொண்டவை.

இத்தகவலை டுவிட்டர் சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. தீவிரவாத மிரட்டல்கள் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை செயல்படுத்தவும் டுவிட்டர் பயன்படுத்தப்பட்டது.

எனவே, அந்த கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரவேற்றுள்ளது.