கடற்படை தளபதிகளுக்கு கடற்படையை விட ராஜபக்சவினரை காப்பாற்றுவதே ….!

கடற்படை லெப்டினட் யோஷித்த ராஜபக்ச 70 முறை வெளிநாடு சென்றிருந்த போதிலும் 27 பயணங்களுக்கு மாத்திரமே கடற்படையிடம் அனுமதியை பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
mahintha rajapakse

யோஷித்த ராஜபக்ச கடற்படையின் ஒழுக்கத்தை மீறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காத கடற்படை தளபதியும் கடற்படையின் ஒழுக்கத்தை மீறியிருப்பதாக கடற்படையின் அதிகாரிகள் கூறுகின்றனர். 

முன்னாள் கடற்படை தளபதி ராஜபக்சவினருக்கு ஆதரவான நபர் என்பதால், யோஷித்த ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்ற போதிலும் தற்போதைய ஜனாதிபதி நியமித்துள்ள கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தனவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததால், அவரும் கடற்படை ஒழுக்கத்தை மீறியுள்ளார். 

முன்னாள் மற்றும் இந்நாள் கடற்படை தளபதிகளுக்கு கடற்படையை விட ராஜபக்சவினரை காப்பாற்றுவதே முக்கியமானதாக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.