அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு புதுக்கடையிலும் மாளிகாவத்தை பாதை ஓரங்களில் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் சாப்பாட்டுக்கடை தான் அதிகரிக்கின்றது. காரணம் 10 அடி 15 அடி முடுக்கு வீடுகளில் வாழும் முஸ்லீம் தாய் மாா்களுக்கு தமது பிள்ளைகளுக்கு கனவனுக்கு சமைத்து கொடுக்கக கூடிய வசதி வாய்ப்பு இல்லை. முவேலையிலும் பாதையோரம் கடையில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு விட்டு பாதை ஓரம் நின்று காலத்தை கடத்திவிட்டு இரவில் 15 அடி ருமில் 10 பேர் மடங்கி துாங்கி எழும்புகின்றனா். இது தான் கொழும்பில் வாழும் முஸ்லீம்களின் நிலை. என மேல்மாகாண சபை உறுப்பிணரும் புதக்கடை ஜ.தே.கட்சியின் அமைப்பாளருமான பைருஷ் ஹாஜி உரை நிகழ்த்தினாா்
மேல் மாகாண சபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜி அவரது சொந்த நிதியில் – நேற்று முன்தினம் (5) புதக்கடையில் உள்ள அவரது அழுவலகத்தில் வைத்து 150 சமையல் கேஸ் குக்கா், 50 தையல் ்மெசினகள், பள்ளிவாசலுக்குரிய 25 கதிரரைகள் மேசை அலுமாரிகளை வழங்கி வைத்தாா்.
அவா் அங்கு உரையாற்றும் போது தெரிவித்தாவது – இப் பொருட்களை நான் வழங்குவது தமது பிரதேச தாய்மாா்கள் வீட்டில் உள்ள குமா் பிள்ளைகள் சுயதொழில் ஆரம்பித்து தமது வாழ்வாதாரத்தை முன்னேற்றம் கொண்டே இதனை இலவசமாக வழங்குவதாக தெரிவித்தாா் எமது ஆதரவாளா்கள் தோ்தல் வரும்போது மட்டும் இப் பிரதேசத்தில் வருபவா்கள் அனைவருக்கும் பின்னாலே சென்று ஜயவே போடுவாா்கள் ஆனால் அவா்கள் கண்ட பயன் ஒன்றும் இல்லை. தனது வாக்ககுகளை பெற்ற ஒருவா் தமது மக்களது பிரச்சினைகளை தீா்க்க வேண்டும். அம்மக்களது அன்றாட வாழ்வாதரத்திற்காகவது உதவ வேண்டும். ஆனால் நான் அவ்வாறக அல்ல எனக்கு எது கிடைத்தாலும் கஸ்டப்படும் அல்லபடும் மக்களை மாதாந்தம் ்இனம் கண்டு அவா்களுக்கு உதவுவேன். நான் ஒருபோதும் வாக்கு வங்கிக்காக உதபுவன் அல்ல. அடுத்த மாதமும் இதேபோன்று புதுக்கடையில் வாழும் மூவின மக்களுக்கும் உதவு காத்திருக்கின்றேன். என அவா் அங்கு உரையாற்றினாா்கள்.