இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவினர் கடந்த 23ம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
முன்னதாக 03 தினங்களில் அந்த அறிக்கை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டதன் காரணமாக குறித்த அறிக்கை தாமதமாகியுள்ளது.
இந்த ஐவர் அடங்கிய குழுவின் தலைவராக பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார பணியாற்றியதுடன, பிரதிப் பணிப்பாளர் நாயகம் லட்சுமி சோமதுங்க, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ரோஹண டி சில்வா, கண்காணிப்பு வைத்தியர் கமல் ஜயசிங்க, விஷேட வைத்தியர் ராஜபிரிய பாலசூரிய ஆகியோர் அந்தக் குழுவில் பணியாற்றினர்.