யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி, அல் ஹதீஜா மகளீர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இதுவரை வருடாந்த விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப்படவில்லை .
இதற்கு காரணம் வளப்பற்றக்குறை மற்றும் நிதிபற்றாக்குறை என பாடசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விரு பாடசாலை தொடர்பாக யாழ வலயக்கல்வி எவ்வித அக்கறையும் இன்றி செயற்படுகின்றது.புதிய ஆண்டு தொடங்கி இன்னும் இவ்விரு பாடசாலை அபிவிருத்தி தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கம் செயற்திறன் அற்றதாக உள்ளது.குறிப்பாக ஹதிஜா பாடசாலைக்கு என பழைய மாணவர் சங்கம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
ஆனால் யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கம் இருக்கின்றது.எனினும் தற்போது அப்பாடசாலைக்கு வந்துள்ள புதிய அதிபருக்கும் சங்கத்திற்கும் சுமூகமான உறவு பேணப்படவில்லை.
அடுத்து ஹதீஜா பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கூட நிறைவு செய்யப்படவில்லை.இப்பாடசாலையை அவசர அவசரமாக ஆரம்பித்தவர்கள் இடைநடுவில் கைவிட்டுள்ளனர்.
அரசினால் நிதிகள் கூட இன்னும் இப்பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
நிதிகளை பெறுவதற்கான ஒழுங்குகள் இப்போது தான் நடைபெறுகின்றன.அதற்குள் இணைப்பாட விதானத்தில் உள்ள விளையாட்டு போட்டி நடாத்தப்பட வாய்ப்பு குறைவு.
அத்துடன் அல்ஹதீஜா பாடசாலை சொந்தக் கட்டடத்தில் இயங்காததன் காரணமாக மாணவர் தொகை குறைவாக உள்ளது.இதனுடன் விளையாட்டு உபரணங்கள் அதனை பெற நிதிகள் கையிருப்பில் இல்லை.என வளப்பற்றாக்குறையாக உள்ளதாக பெற்றொரிடம் நிர்வாகம் கூறியுள்ளது.
எனவே யாழ் கல்வி வலயம் இது குறித்து அக்கறை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.