கனடா பாராளுமன்றத்தில் சீக்கிய மந்திரி மீது இனவெறி !

harjit-sajjan.jpg.size.xxlarge.letterbox

 

கனடாவை சேர்ந்த சீக்கியர் ஹர்ஜித் சாஜன் (45). இவர் பிரதமர் ஜஸ்டின் டிருடியோ அரசில் ராணுவ மந்திரியாக பதவி வகிக்கிறார்.

தற்போது கனடா பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது மந்திரி ஹர்ஜீத் சாஜன் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த எம்.பி.யும், முன்னாள் ராணுவ மந்திரியுமான ஜாசன் கென்னி குறுக்கிட்டு மந்திரி ஆங்கிலத்தில் அளித்த பதிலை ஆங்கிலத்திலேயே மொழி பெயர்க்க வேண்டும் என பலத்த சத்தத்துடன் கேலி– கிண்டல் செய்தார்.

அவரது இந்த நடவடிக்கைக்கு ஆளும் லிபரல் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெவின் லமோரஸ் கூறும் போது, கென்னி தனது நடவடிக்கைக்காக மந்திரி ஹர்ஷித் சாஜனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதே கருத்தையே இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆளும் லிபரல் கட்சி எம்.பி. ரூபி சகோடாவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சி எம்.பி. ஜாசன் கென்னி மந்திரி ஹர்ஜித் சாஜன் மீது தனது இனவெறியை காட்டியுள்ளார் என்ற கருத்து எழுந்துள்ளது.

அதை தொடர்ந்து கென்னி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மந்திரியின் பதில் முற்றிலும் பொருத்தமற்றதாக இருந்தது. அதனால் தான் அப்படி தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.