வாக்குறுதி அளிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் சேர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அரச சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த எச்சரிக்கையை விடுத்த அச் சம்மேளனத்தின் தலைவர் டபிள்யூ.எம்.பியதாச, அரசாங்கம் வாக்குறுதியளித்தவாறு தனியார் துறையினருக்கும் 2,500 ரூபா சம்பள உயர்வு இந்த மாதம் முதல் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வசந்த ஹந்தபான்கொட உட்பட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.