எனது கைகள் சுத்தமானவை, இன்னொரு கட்சியை உருவாக்குவதில் தவறில்லை : கோத்தபாய ராஜபக்ச !

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்களிற்கான தனது கடமைகளை நிறைவேற்றாவிட்டால் இன்னொரு கட்சியை உருவாக்குவதில் தவறில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிதாக உருவாகவுள்ள எந்த கட்சியினதும் தலைமைப்பொறுப்பை ஏற்கப்போவதில்லை என மேலும் குறிப்பிட்டுள்ள அவர் ஸ்ரீலங்கா கட்சி தற்போது நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் எந்த கட்சிக்கும் ஆதரவை வழங்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.

 

godfapaya rajapakse

பாராளுமன்றத்தில் எதிர்கட்சி என்று எதுவும் இல்லை,ஓரு நாட்டின் ஜனநாயகத்தின் நலனிற்கு எதிர்கட்சி அவசியம்,தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சி ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றவில்லை இதன் காரணமாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு வலுவான எதிர்கட்சி அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனது கைகள் சுத்தமானவை,என்னிடம் பெருமளவு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்தவர்கள் அதற்கு என்ன நடந்தது என தெரிவிக்கவேண்டும்,எனது வங்கிக்கணக்குகளை எவராவது சோதனையிட வந்தால் நான் அதற்கு ஓத்துழைப்பை வழங்குவேன்,முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமாக உள்ளவர்களை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்வது அரசியல்பழிவாங்கல் நடவடிக்கையே என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .