ஐநா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையின் நலன்கள் பாதுகாக்கப்படும் : ஜனாதிபதி !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையின் நலன்கள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று வாக்கு றுதியளித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வுகளின்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

maithripala

2009 இல் யுத்தம் முடிவடைந்தபின்னர் முக்கிய கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஐக்கியநாடுகள் தீர்மானம் மனிதஉரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்காது. எனினும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் போது நாட்டின் கௌரவத்தையும், படையினரையும் கௌரவத்தையும் அரசாங்கம் காப்பாற்றும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது:

 ஜாதி, மத, பேதமின்றி போராடி சுதந்திரம் பெற்றோம், எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது, பயங்கரவாதம் உருவாகியிருக்காது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகின்றன. இதில் சற்று முன்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

“”1948ம் ஆண்டுகளில் பெற்ற சுதந்திரத்தை நாம் இப்போது கொண்டாடுகிறோம், 1948 முதல் 2012ம் ஆண்டு வரை பார்த்தால் அன்று முதல் இன்று வரை அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அன்று மக்கள் எதிர்பார்த்த சுதந்திரமும் இன்று எதிர்பார்க்கும் சுதந்திரமும் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.

1950களில் பிறந்த குழந்தையை ஒரு காலச்சார சிந்தனையுடைய குழந்தையாகவே நான் பார்க்கிறேன். இன்று பிறந்த குழந்தைகளை தொழில்நுட்ப சிந்தனையுடைய குழந்தையாகவே நான் பார்க்கிறேன்.

இரு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து நாம் முன்னேற வேண்டும். 400 ஆண்டுகளாக வௌிநாட்டு ஆட்சியாளர்களினால் நாம் பலவற்றை இழந்தோம். எமது கலாச்சாரத்தை, பண்பட்டை, பொருளாதாரத்தை, பண்டைய மன்னர்கள் நிர்மாணித்த பலவற்றை நாம் இழந்தோம்.

உயிர் தியாகத்துடன் போராடி 1948இல் சுதந்திரம் பெற்றோம். ஜாதி, மத, பேதமின்றி அதற்காக போராடினோம். எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது, பயங்கரவாதம் உருவாகியிருக்காது.

மொழி, மத, கலாச்சார பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் புரிந்து சரியாக செயற்பட்டிருக்க வேண்டும்.

சுதந்திரம் என்ற சொல்லின் சரியான அர்தத்தை புரிந்து செயற்படுவது மிக மிக முக்கியம்

சுதந்திரம் எனும் சொல்லுக்கு பல அர்த்தத்தை முன்வைக்க பலர் முயற்சிக்கின்றனர். ஜனாநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். எமது மக்களை நாம் சரியான வழியில் இட்டுச் செல்ல வேண்டும்.

யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தை சரியாக வழிநடத்தாமையால் தான் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தால் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது. மூவின மக்களும் 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஆட்சியை எம்மிடம் ஒப்படைத்தனர்.

1948ல் இருந்து தொடர்ந்த பிரச்சினைகளை 2015க்கு பின்னர் தீர்க்க வேண்டி ஏற்பட்டது. எமக்கு பின் சுதந்திரம் பெற்ற பல நாடுகள் முன்னேறியுள்ளன. உங்களை, நாட்டை, நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்.

கடந்த ஒரு வருடத்திலே ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் முழுமையாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

நாங்கள் நாட்டில் சுதந்திர ஆணகை்குழுக்கள் பலவற்றை ஏற்படுத்தி இருக்கின்றோம். இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக இல்லாதொழிக்க நாம் செயற்படுகின்றோம்.

பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தியுள்ளோம். ஊடகத்துறைக்கும் என்றுமில்லாத சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அவர்கள் அதை சரியாக பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட்டு நாட்டை நெருக்கடி நிலைக்கு தள்ள வேண்டாம்.

உயிர்த்தியாகம் செய்து நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த தேசிய வீரர்களை நாம் இங்கே நினைவுபடுத்துகின்றாம்.

எமது நாடு தீவாக இருக்கின்றது. எமது நாட்டைச் சூழ கடல்வளம் இருக்கின்றது. ஆகவே எம்மைச் சூழ உள்ள கடலவளத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.