அல்குர்ஆன் மனனக் கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பும் !

22-PMMA CADER-23-01-2016_Fotor

 

பி.எம்.எம்.ஏ.காதர்

 

 பெரிய நீலாவணை அக்பர் சமூக ஒன்றியத்தின் அனுசரணையில் பெரிய நீலாவணை அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கை நிலையம் நடாத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பு நிகழ்வும் சனிக்கிழமை(23-01-2016)இரவு பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.

பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலின் தலைவர் ஐ.எல்.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம்,விஷேட அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஆகியோரும் கலந்து கொண்டணர்.

இங்கு அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கையை நிலைய மாணவர்கள் 45 பேர்களுக்கிடையில் ஆறு பிரிவுகளாக நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் 6 பிரிவுகளிலும் முதல் இடங்களைப் பெற்ற ஆறு மாணவர்களுக்கும் நினைவுச் சின்னமும்,பரிசுப் பொதியும் வழங்கப்பட்டது.

1-PMMA CADER-23-01-2016_Fotor

மேலும் 6 பிரிவுகளிலும் 2ஆம்,3ஆம் இடங்களைப் பெற்ற 12 மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசுப் பொதிகளும்,ஏனைய 27 மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்;டன.ஆசிரியர்களான ஹாபிஸ் எம்.ஜே.சினான்,ஹாபிஸ் ஏ.ஜி.அப்சான் ஆகியோரும் நினைவுச்சின்னம் வழங்கி கெரவிக்க்ப்பட்டனர்.

இதில் மற்றுமொரு நிகழ்வாக இஸ்லாமிய நாகரீகத் துறையில் கலாநிதிப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்த மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அறபுக் கல்லூரி முதல்வரும்,மருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையத்தின் தலைவருமான கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி பிரதம அதிதியால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2-PMMA CADER-23-01-2016_Fotor

இங்கு விஷேட விருந்தினர்களாக உலமாக்கள், கல்வியலாளர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள்,அதிபர்கள், ஆசிரியர்கள்; ஊர்பிரமுகர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

4-PMMA CADER-23-01-2016_Fotor