தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடயாது : உள்துறை அமைச்சர் !

independence-day-sri-lanka-portal.blogspot.com

தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடயாது என உள்துறை அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள 68ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தில் சிங்களம் மற்றும் ஆகிய இரண்டு மொழிகளும் தேசிய மொழிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1948ம் ஆண்டு தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதாகத்தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அரச நிறுவனங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவதாகவும் எதிர்வரும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது சர்ச்சைக்குரிய விடயமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடுவதும் மாத்தறையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதும் பிரச்சினையாகாது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.