உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க முடியும் : பிரதமர் !

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

ranil wickrama

கொழும்பில் நேற்றைய தினம் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற ஆசிய பிராந்திய வலய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் விசாரணை ஒன்றில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க முடியும் என்ற போதிலும் தீர்ப்பு அளிக்கும் செயன்முறையில் பங்களிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகளில் பங்கெடுக்க அனுமதியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரை உள்நாட்டு அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நோக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதவான்கள் உள்ளக விசாரணைகளில் அமர்வதற்கு அனுமதிக்க வேண்டுமாயின் அரசியல் சானத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.நீதிமன்றக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்கள் மற்றும் நல்லிணக்க முனைப்புக்கனை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.